

கராகஸ்,
வெனிசுலாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த புதன்கிழமை அடுத்தடுத்து 2 நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.2 மற்றும் 7.5 என பதிவான இந்த நிலநடுக்கங்களால் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 920 ஆக அதிகரித்துள்ளது. மேலும், மீட்புப்பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், லெனிசுலாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் வடக்கு கடற்கரை நகரை மையமாக கொண்டு நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. வெனிசுலாவில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.