வெனிசுலா கடற்கரை பகுதியில் அமெரிக்க போர் விமானங்கள் பறந்ததால் பரபரப்பு

அமெரிக்காவின் நடவடிக்கை நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக வெனிசுலாவின் பாதுகாப்பு மந்திரி தெரிவித்துள்ளார்.
வெனிசுலா கடற்கரை பகுதியில் அமெரிக்க போர் விமானங்கள் பறந்ததால் பரபரப்பு
Published on

வெனிசுலா,

வெனிசுலாவின் வடக்கு பகுதி கரீபியன் கடற்கரை பகுதியில் அமெரிக்காவின் எப்-35 ரக போர் விமானங்கள் பறந்ததாக வெனிசுலா வான் பாதுகாப்பு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,

அமெரிக்க போர் விமானங்கள் எங்கள் கடற்கரை யில் இருந்து சுமார் 75 கிலோ மீட்டர் தூரத்தில் (46.6 மைல்) கண்டறியப்பட்டு உள்ளது. இது சர்வதேச சட்டத்தை மீறும் செயலாகும் என தெரிவித்து இருக்கிறது. தங்கள் நாட்டு கடற்கரை பகுதியில் அமெரிக்க போர் விமானங்கள் பறந்ததற்கு வெனிசுலா நாட்டின் பாதுகாப்பு மந்திரி விளாடிமிர் பட்ரினோ கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது பற்றி அவர் கூறும் போது அமெரிக்கா வேண்டுமென்றே ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது. இது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கையை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com