வெனிசுலாவின் எண்ணெய் நிறுவனங்கள் தனியாருக்கு தாரை வார்ப்பு ; புதிய சட்டத்துக்கு இடைக்கால அதிபர் ஒப்புதல்

மதுரோவின் கைதை தொடர்ந்து டெல்சி ரோட்ரிக்ஸ் வெனிசுலாவின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றார்.
வெனிசுலாவின் எண்ணெய் நிறுவனங்கள் தனியாருக்கு தாரை வார்ப்பு ; புதிய சட்டத்துக்கு இடைக்கால அதிபர் ஒப்புதல்
Published on

கராக்கஸ்,

போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி வெனிசுலா அதிபரை கடந்த 3-ந்தேதி அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் அதிரடியாக கைது செய்தது. இது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பி இருந்தது.

மதுரோவின் கைதை தொடர்ந்து டெல்சி ரோட்ரிக்ஸ் வெனிசுலாவின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றார். அவர் தனது பதவிக்காலத்தின் முக்கிய நடவடிக்கையாக, நாட்டின் அரசியலையே மாற்றியமைக்கும் சட்டம் ஒன்றுக்கு ஒப்புதல் அளித்து உள்ளார்.

அதாவது வெனிசுலாவின் முந்தைய அதிபர்களான மதுரோ, சாவேஸ் இருவரும் நாட்டின் எண்ணெய் வளத்தின் மீதான கட்டுப்பாட்டை அரசிடம் வைத்திருந்தனர். இதுவே அமெரிக்காவின் ேகாபத்துக்கும் காரணமாக இருந்தது.

இதற்குப்பதிலாக தற்போது எண்ணெய் உற்பத்தி மற்றும் விற்பனையில் தனியார் முதலீட்டுக்கு ஆதரவளிக்கும் வகையில் புதிய சட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி அதற்கு ஒப்புதல் அளித்து உள்ளார்.

இதன் மூலம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசின் வசம் இருந்த எண்ணெய் நிறுவனங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்படும் நிலை உருவாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com