கிம் ஜாங் அன் சகோதரர் கொலையில் கைதான வியட்நாம் பெண்ணும் விடுதலை ஆகிறார்

கிம் ஜாங் அன் சகோதரர் கொலையில் கைதான வியட்நாம் பெண்ணும் விடுதலை ஆக உள்ளார்.
கிம் ஜாங் அன் சகோதரர் கொலையில் கைதான வியட்நாம் பெண்ணும் விடுதலை ஆகிறார்
Published on

ஷா ஆலம்,

வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜாங் நாம், கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் ரசாயன வேதிப்பொருள் வீசி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக இந்தோனேஷியாவை சேர்ந்த சித்தி ஆயிஷா மற்றும் வியட்நாமை சேர்ந்த தோவன் தி குவோங் ஆகிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்கள் மீதான கொலை வழக்கு கோலாலம்பூரின் புறநகர் பகுதியான ஷா ஆலமில் உள்ள ஐகோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக இந்தோனேஷிய பெண் சித்தி ஆயிஷா மீதான குற்றச்சாட்டுகள் திரும்ப பெறப்பட்டு கடந்த மாதம் விடுதலை செய்யப்பட்டார்.

இதன் தொடர்ச்சியாக தற்போது தோவன் தி குவோங் மீதான குற்றச்சாட்டும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இனால் அவர் அடுத்த மாதம் (மே) தொடக்கத்தில் விடுதலை ஆவார் என அவரது வக்கீல் தெரிவித்தார். இது நேர்மையான தீர்ப்பு என தோவன் தி குவோங் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பிய கிம் ஜாங் நாமின் கொலையில் கைது செய்யப்பட்ட 2 பெண்களும் விடுவிக்கப்படுவதால், இந்த கொலையின் பின்னணியில் இருப்பது யார்? என்ற சந்தேகம் தீவிரமடைந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com