விஜய் மல்லையாவின் உல்லாச படகு விற்பனை: இந்திய வங்கிகள் பாக்கியை பெற்றுக்கொள்ள லண்டன் கோர்ட்டு உத்தரவு

விஜய் மல்லையாவின் உல்லாச படகு விற்பனை செய்யப்பட்டது. இந்திய வங்கிகள் பாக்கி தொகையை பெற்றுக்கொள்ள லண்டன் கோர்ட்டு உத்தரவிட்டது.
விஜய் மல்லையாவின் உல்லாச படகு விற்பனை: இந்திய வங்கிகள் பாக்கியை பெற்றுக்கொள்ள லண்டன் கோர்ட்டு உத்தரவு
Published on

லண்டன்,

தொழில் அதிபர் விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடனை வாங்கிக்கொண்டு திருப்பி செலுத்தாமல் லண்டன் தப்பிச் சென்றுவிட்டார். அவர் மீதான வழக்கு விசாரணை லண்டன் ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

விஜய் மல்லையாவுக்கு சொந்தமான உல்லாச படகு ஒன்று மால்டா தீவில் கைப்பற்றப்பட்டது. விஜய் மல்லையா தரவேண்டிய கடன், வழங்கப்படாத சம்பளம் போன்ற பலவற்றுக்காக அந்த உல்லாச படகை விற்க முடிவு செய்யப்பட்டு, அதன்படி மால்டா கோர்ட்டில் வெற்றிகரமாக ஏலம் விடப்பட்டது. எனவே அந்த தொகையில் இருந்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்பட அனைத்து இந்திய வங்கிகளும் தங்களுக்கு கிடைக்க வேண்டிய கடன் தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்று லண்டன் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு மே மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com