இந்தியாவுக்கு நாடு கடத்துவதை எதிர்த்து விஜய் மல்லையா மீண்டும் மனு தாக்கல்

இந்தியாவுக்கு நாடு கடத்துவதை எதிர்த்து விஜய் மல்லையா மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்தியாவுக்கு நாடு கடத்துவதை எதிர்த்து விஜய் மல்லையா மீண்டும் மனு தாக்கல்
Published on

இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடிக்கு கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என்று லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு குறித்த விவரம் இங்கிலாந்து அரசின் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உள்துறை செயலாளர் சஜித்ஜாவித்தும் விஜய் மல்லையாவை நாடு கடத்த அனுமதி வழங்கினார்.

இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரும் மனுவை இங்கிலாந்து ஐகோர்ட்டில் விஜய் மல்லையா தாக்கல் செய்தார். அம்மனு கடந்த வாரம் தள்ளுபடி செய்யப்பட்டது.

புதிதாக மனு தாக்கல் செய்ய விஜய் மல்லையாவுக்கு ஒரு வாரம் அவகாசம் அளிக்கப்பட்டது. அதன்படி, அவர் புதுப்பித்தல் மனுவை தாக்கல் செய்துள்ளார். அம்மனு, உரிய நேரத்தில் வாய்மொழி விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று ஐகோர்ட்டு அதிகாரி ஒருவர் கூறினார். வாய்மொழி விசாரணை அடிப்படையில், மனுவை முழுமையான விசாரணைக்கு அனுப்புவது பற்றி நீதிபதி முடிவு செய்வார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com