ஹோண்டுராஸ் சிறையில் கொடூரம்... துப்பாக்கியால் சுட்டு, எரித்து 41 பெண் கைதிகள் படுகொலை

ஹோண்டுராஸ் நாட்டில் உள்ள சிறையில் ஏற்பட்ட வன்முறையில் 41 பெண் கைதிகள் கொடூர கொலை செய்யப்பட்டு உள்ளனர்.
ஹோண்டுராஸ் சிறையில் கொடூரம்... துப்பாக்கியால் சுட்டு, எரித்து 41 பெண் கைதிகள் படுகொலை
Published on

தெகுசிகல்பா,

ஹோண்டுராஸ் நாட்டின் தலைநகர் தெகுசிகல்பா நகர் அருகே தமரா பகுதியில் மகளிர் சிறை ஒன்று உள்ளது. இந்த சிறையில், மகளிர் மட்டுமே அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், சிறையில் உள்ள மகளிர் கைதிகள் இடையே திடீரென வன்முறை ஏற்பட்டு உள்ளது. குழுக்களாக பிரிந்து மோதி கொண்ட இந்த சம்பவத்தில் 41 கைதிகள் மரணம் அடைந்து உள்ளனர் என தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்து உள்ளது.

இதுபற்றி அந்நாட்டு பாதுகாப்பு துறை துணை மந்திரி ஜூலிஸ்சா வில்லானுவா கூறும்போது, உயிரிழப்புகள் வருத்தம் அளிக்கிறது என கூறியுள்ளார். நாட்டின் சட்ட திட்டம் ஆனது, திட்டமிடப்பட்ட குற்றங்களால் கடத்தி செல்லப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டில் இதேபோன்று மற்றொரு சம்பவம் நடந்தது. அதில், ஆண்கள் மட்டுமே உள்ள சிறைகளில் கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 40 கைதிகள் உயிரிழந்தனர்.

அந்நாட்டில் சிறையில் ஏற்பட்டு உள்ள கொடூர கலகத்தில் பலர் பலியாகி உள்ள சம்பவம், மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராசில் பல ஆண்டுகளில் இல்லாத வகையில் நடந்து உள்ளது என தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com