இலங்கை : அதிபர் மாளிகை தொலைக்காட்சியில் தங்கள் ஆர்ப்பாட்டத்தை பார்க்கும் போராட்டக்காரர்கள்..!!

தொலைக்காட்சிக்கு முன்பு தரையில் படுத்துக்கொண்டு போராட்டக்காரர்கள் செய்திகளை பார்த்தனர்.
Image Tweeted By @papas_imaculate
Image Tweeted By @papas_imaculate
Published on

கொழும்பு,

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாட்டால் கொதித்தெழுந்த மக்கள் அங்கு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், அதிபர் மாளிகையை கைப்பற்றினர்.

இலங்கை அதிபர் மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள போராட்டக்காரர்கள் பலர் தற்போது அங்கேயே தங்கியுள்ளனர். அங்குள்ள குளியல் அறைகளிலும், நீச்சல் குளத்திலும் அவர்கள் குளித்து மகிழ்ந்தது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் நேற்று வேகமாக பரவியது.

இந்த நிலையில் அதிபர் மாளிகையில் உள்ள போராட்டக்காரர்கள் அங்குள்ள தொலைக்காட்சியில் தங்கள் சொந்த ஆர்ப்பாட்டத்தை பார்க்கும் மற்றொரு படம் இணையத்தில் வெளிவந்துள்ளது. அந்த புகைப்படத்தில் தொலைக்காட்சிக்கு முன்பு தரையில் படுத்துக்கொண்டு போராட்டக்காரர்கள் நேரடி செய்திகளை பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

இதனை அங்குள்ள ஒருவர் தனது மொபைல் போனில் போட்டோ எடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com