இது பாண்டாவா? இல்லை மனிதனா?... ஜப்பான் பூங்காவில் நடந்த வித்தியாச சம்பவம்

பூங்காவில் பராமரிப்பாளர்கள் பாண்டா வேடமணிந்து பார்வையாளர்களை மகிழ்வித்து வருகின்றனர்.
டோக்கியோ,
ஜப்பானில் உள்ள பூங்கா ஒன்றில் பாண்டாக்கள் இல்லாததால், பூங்கா பராமரிப்பாளர்கள் பாண்டா வேடமணிந்து பார்வையாளர்களுக்கு வேடிக்கை காட்டி வருகின்றனர்!
பூங்காவில் இருந்த 4 பாண்டாக்களும் சீனாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டதால் நிர்வாகம் இம்முடிவை எடுத்துள்ளது. இதற்கு முன் வரிக்குதிரைக்கு பதிலாக கழுதைக்கு வண்ணம் பூசியது சீனாவில் பேசுபொருளானது.
ஜப்பானில் உள்ள ஒரு பூங்காவில் பாண்டாக்கள் இல்லாத நிலையில், பூங்கா பராமரிப்பாளர்கள் பாண்டா வேடமணிந்து பார்வையாளர்களை மகிழ்வித்து வருகின்றனர். பூங்காவில் இருந்த நான்கு பாண்டாக்களும் சமீபத்தில் சீனாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, பார்வையாளர்களின் வருகை குறையாமல் இருக்க இந்த வித்தியாசமான முயற்சியை பூங்கா நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
பாண்டா வேடமணிந்த பணியாளர்கள் நடனம் ஆடுவதும், குழந்தைகளுடன் புகைப்படம் எடுப்பதும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக குழந்தைகள் இந்த முயற்சியை ஆர்வமுடன் ரசித்து வருகின்றனர்.
இதற்கு முன், சீனாவில் ஒரு பூங்காவில் வரிக்குதிரை இல்லாத காரணத்தால், கழுதைக்கு வரிக்குதிரை போல் வண்ணம் பூசப்பட்ட சம்பவம் பெரும் பேசுபொருளாக மாறியது குறிப்பிடத்தக்கது.






