அமெரிக்க நாடாளுமன்ற கலவரக்காரர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவேன் - விவேக் ராமசாமி அதிரடி

அமெரிக்க நாடாளுமன்ற கலவரக்காரர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவேன் என விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நியூயார்க்,

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்தநிலையில் குடியரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி விருப்பம் தெரிவித்துள்ளார். அதன்படி நாட்டின் பல்வேறு நகரங்களில் தீவிர பிரசாரங்களில் விவேக் ஈடுபட்டு வருகிறார். மேலும் பொது விவாதங்களில் பங்கேற்று பொதுமக்களிடம் ஆதரவு திரட்டுகிறார். கடந்த 2021-ம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்ற கலவரம் நடந்தது. அதில் ஈடுபட்ட கலவரக்காரர்கள் அடையாளம் காணப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் 2024-ம் ஆண்டு அமெரிக்க தேர்லில் வெற்றி பெற்றால் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் விடுவிப்பதாக அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "பைடன் ஆட்சியில் அமெரிக்காவின் நீதித்துறை சுதந்திரம் இழந்து காணப்படுகிறது. பயங்கரவாதிகள் பலர் அமெரிக்காவில் சுற்றித்திரியும் நிலையில் நாடாளுமன்ற கலவரத்தின் ஈடுபட்டதாக கூறப்படுபவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நான் ஜனாதிபதியாக பதவியேற்றால், நாடாளுமன்ற கலவரத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்குவேன்" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com