இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு; 13 பேர் பலி

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு; 13 பேர் பலி
Published on

ஜகர்த்தா,

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் செமேரு எரிமலை அமைந்துள்ளது. 3,676 மீட்டர் உயரம் கொண்ட இந்த எரிமலையில் இருந்து நேற்று லேசாக புகை கிளம்பியது. இதன்பின்பு எரிமலை வெடித்து, சாம்பல் புகை வான்வரை சென்று காற்றில் கலந்தது.

இந்த எரிமலை வெடிப்பிற்கு அருகேயிருந்த வீடுகள் சேதமடைந்தன. பாலம் ஒன்றும் சேதமடைந்து உள்ளது. ஒருவர் உயிரிழந்த நிலையில், 41 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது என உள்ளூர் ஊடக தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், எரிமலை வெடிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. 100 பேர் காயமடைந்து உள்ளனர். அந்த பகுதியில் இருந்து 900 பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com