ஹவாய் தீவில் எரிமலைச் சீற்றம் நெருக்கடி நிலை அறிவிப்பு

அமெரிக்காவின் ஹவாய் தீவில் மக்கள் குடியிருக்கும் பகுதி அருகே கீலவேயா எரிமலை உள்ளது. இந்த எரிமலையில் சீற்றம் ஏற்பட்டு உள்ளது.
ஹவாய் தீவில் எரிமலைச் சீற்றம் நெருக்கடி நிலை அறிவிப்பு
Published on

வாஷிங்டன்,

சமீப காலமாக ஹவாய் தீவில் ஏற்பட்டு வந்த நில நடுக்கங்களின் எதிரொலியாகத்தான் இந்த எரிமலையில் சீற்றம் ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.

எரிமலை, குழம்பினை கக்கி வருகிறது. இதை அடுத்து அந்தப் பகுதியில் வசித்து வருகிற மக்கள் கட்டாயமாக வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து அங்கு இருந்து 1,500 பேர் வெளியேறினர்.

அவர்களுக்காக அமெரிக்க செஞ்சிலுவை சங்கம், தங்குமிடங்களை அமைத்து உள்ளது.

எரிமலைச்சீற்றத்தின் காரணமாக சாலையை பிளந்து கொண்டு, குழம்பு வானை நோக்கி பீறிட்ட காட்சியை உள்ளூர் தொலைக்காட்சி சேனல்கள் காட்டின.

எரிமலை குழம்பானது 150 அடி உயரத்துக்கு பீறிட்டு, 183 மீட்டர் சுற்றளவுக்கு பரவுவதாக தகவல்கள் கூறுகின்றன. எரிமலைக்குழம்பு காட்டுக்கும் பரவி அங்கு மரங்கள் எரியும் வாசனையையும், கந்தக வாசனையையும் உணர முடிவதாக ஜெரேமியா என்பவர் தெரிவித்து உள்ளார்.

எரிமலை சீற்றத்தின் காரணமாக அங்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com