போருக்கு பின் முதன் முறையாக கிழக்கு உக்ரைனுக்கு செல்லும் அந்நாட்டு அதிபர்

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, போர் தொடங்கியதிலிருந்து முதன் முறையாக கிழக்கு உக்ரைனுக்கு சென்றுள்ளார்.
image credit:ndtv.com
image credit:ndtv.com
Published on

கீவ்,

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் இப்போது கிட்டத்தட்ட கிழக்கு உக்ரைன் மீதான போராக மாறி இருக்கிறது. கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய 2 முக்கிய பகுதிகள் உள்ளன.

இந்த டான்பாசை முற்றிலுமாக கைப்பற்றுவதற்காக ரஷிய படைகள் உக்கிரப்போரில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளன. இதனால், அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் முற்றிலும் சேதமடைந்து கானப்படுகிறது.

இந்த நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி போர் தொடங்கியதில் இருந்து முதன் முறையாக கிழக்கு உக்ரைனுக்கு வருகை தந்துள்ளார். ஜெலென்ஸ்கியின் அலுவலகம் டெலிகிராமில் அவர் புல்லட் ப்ரூஃப் உடையை அணிந்து வருகை தந்ததையும், கார்கிவ் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பெரிதும் அழிக்கப்பட்ட கட்டிடங்களையும் காட்டும் வீடியோவை வெளியிட்டது.

அதில், "கார்கிவ் மற்றும் பிராந்தியத்தில் 2,229 கட்டிடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. நாங்கள் மீட்டெடுப்போம், மீண்டும் கட்டியெழுப்புவோம் மற்றும் வாழ்க்கையை மீட்டெடுப்போம். கார்கிவ் மற்றும் பிற அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு தீமை வந்துள்ளது" என்று அந்த பதிவில் கூறியுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com