பிரெக்ஸிட்’ விவகாரத்தில் தெரசே மே முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மந்திரி ராஜினாமா

பிரெக்ஸிட்’ விவகாரத்தில் தெரசே மே முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மந்திரி வேல்ஸ் பகுதியின் மூத்த மந்திரிகளில் ஒருவரான ஜெரேமி கார்பன் ராஜினாமா செய்துள்ளார்.
பிரெக்ஸிட்’ விவகாரத்தில் தெரசே மே முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மந்திரி ராஜினாமா
Published on

லண்டன்,

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் நடவடிக்கை பிரெக்ஸிட் என கூறப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து எந்த வித ஒப்பந்தமின்றி வெளியேறுவதற்கு இங்கிலாந்து எம்பிக்களிடம் இருந்து போதிய ஆதரவு கிடைக்கவில்லை. இது பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மூன்று முறை எம்பிக்களின் போதிய ஆதரவின்றி தோல்வியடைந்தது.

இந்நிலையில் மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரிக்ஸிட் ஒப்பந்தத்தை அமல்படுத்த மேலும் காலம் நீட்டிப்பு கோரப்படும் என பிரிட்டன் பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார். இதற்காக அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவரான ஜெரமி கோர்பின்னையும் பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளார்.

ஆனால் இதற்கு எதிராக வேல்ஸ் பகுதிக்கான மந்திரி நைஜல் ஆடம்ஸ் போர்க்கொடி உயர்த்தி உள்ளார். ஜெரேமி கார்பைனை பிரதமர் தெரசா மே சந்தித்து பேச இருப்பது மிகப்பெரிய தவறு என அவர் கூறினார். பிரதமர் தெரசா மேவுக்கு தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், அவர் மந்திரி பதவியில் இருந்து நேற்று ராஜினாமா செய்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com