இன்ஸ்டாகிரமில் நீங்கள் போடும் லைக்ஸ்கள் நண்பர்களுக்கு காட்டாமல் இருக்கனுமா? இந்த ட்ரிக்ஸ் பின்பற்றுங்க

லைக்ஸ் மற்றும் கமெண்டுகளை பிறருக்கு தெரியாத வகையில் மறைப்பதற்கான ஆப்ஷன் இன்ஸ்டாகிராமில் வந்துள்ளது.
சென்னை,
தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமானோர் பயன்படுத்தும் செயலியாக இன்ஸ்டாகிராம் உள்ளது. இந்தியாவில் மட்டும் இன்ஸ்டாகிராம் செயலியை சுமார் 48 கோடி பேர் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் டிக்டாக் தடைக்கு பிறகு, இன்ஸ்டா ரீல்ஸ் நெட்டிசன்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அதிலும் இப்போதைய 2கே கிட்ஸ் செல்போனே கதி என கிடக்கிறார்கள். அவர்கள் அதிகம் பார்ப்பது இந்த ரீல்ஸ்களே என்றால் மிகையல்ல. இன்ஸ்டாகிராமில் பயனர்களை கவரும் வகையில், அவ்வப்போது புதிய அப்டேட்களை மெட்டா நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஒரு புதிய அப்டேட் வெளியானது. இன்ஸ்டாவில் பதிவுகளுக்கு லைக் செய்தால், அது அவர்களின் நண்பர்கள் பட்டியலில் உள்ளவர்களுக்கும் காட்டப்படும். அதேபோல, கமெண்ட் செய்தாலும் காட்டும் வகையில் இந்த அப்டேட் செயல்படுகிறது. இன்ஸ்டாகிராமின் இந்த அப்டேட் குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் அதிருப்தியை தெரிவித்து வந்தனர்.
தங்களின் அனுமதியின்றி இப்படியான ஒரு ஆப்ஷன் இருப்பது தனியுரிமையை மீறும் வகையில் உள்ளது என்று நெட்டிசன்கள் ஆதங்கம் தெரிவித்தனர். அதே நேரத்தில், லைக்ஸ் மற்றும் கமெண்டுகளை பிறருக்கு தெரியாத வகையில் மறைப்பதற்கான ஆப்ஷனும் இன்ஸ்டாகிராமில் உள்ளது. இந்த ஆப்ஷன் எங்கே உள்ளது என்பதற்கான விவரங்களை இங்கே பார்க்கலாம்.
இன்ஸ்டாகிராமின் Settings பக்கத்தில் Activity → Friends என்ற டேப் இருக்கும். அந்த ஆப்ஷனில், “Who can see your likes and comments on Reels” என்ற விருப்பம் காட்டப்படும். அதில் No one என்ற ஆப்ஷனை தேர்வு செய்தால் போதும். அதன் பிறகு, நீங்கள் எந்த பதிவுகளுக்கு லைக் அல்லது கமெண்ட் செய்தாலும், அது உங்கள் நண்பர்களுக்கு காட்டப்படாது.






