கொரோனாவுக்கு எதிரான போர்; இந்தியாவுக்கு அவசரகால உதவிகளை அமெரிக்கா வழங்கும்: ஜோ பைடன்

கொரோனாவுக்கு எதிரான போரில் அவசரகால உதவிகளை வழங்கி அமெரிக்கா முழு ஆதரவை அளிக்கும் என ஜோ பைடன் கூறியுள்ளார்.
கொரோனாவுக்கு எதிரான போர்; இந்தியாவுக்கு அவசரகால உதவிகளை அமெரிக்கா வழங்கும்: ஜோ பைடன்
Published on

வாஷிங்டன்,

உலக அளவில் அதிக கொரோனா பாதிப்புகளை கொண்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்காவும், இந்தியாவும் முன்னணியில் உள்ளன. நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உச்சமடைந்து வருகிறது.

உலக நாடுகளில் இல்லாத வகையில் நாள்தோறும் 3 லட்சத்திற்கு கூடுதலான பாதிப்புகள் இந்தியாவில் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. இவற்றை எதிர்கொள்வது பற்றி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில், பிரதமர் மோடியுடன் பேசினேன். கொரோனாவுக்கு எதிரான போரில் அவசரகால உதவிகள் மற்றும் மூல பொருட்களை வழங்குவதற்கு அமெரிக்கா முழுஅளவில் இந்தியாவுக்கு ஆதரவளிக்கும் என உறுதி அளித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

எங்களுக்கான இக்கட்டான நேரத்தில் இந்தியா உதவியாக இருந்தது. அவர்களுக்கு உதவியாக நாங்கள் இருப்போம் என்றும் பைடன் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com