போர் பதற்றம்: மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற இருந்த சி.பி.எஸ்.இ. தேர்வுகள் ஒத்திவைப்பு

10 மற்றும் 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போர் பதற்றம்: மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற இருந்த சி.பி.எஸ்.இ. தேர்வுகள் ஒத்திவைப்பு
Published on

தெஹ்ரான்,

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நேற்று திடீர் தாக்குதலை தொடங்கின. இதற்கு ஈரானும் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் தீவிர போர் நிலவி வருகிறது.

அந்த பிராந்தியம் முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இந்த தகவலை இஸ்ரேலிய அரசு ஊடகம் உறுதி செய்துள்ளது.

தெஹ்ரானில் உள்ள காமேனியின் இல்லம் தரைமட்டமாக்கப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் காமேனியின் மகள், மருமகன் மற்றும் மருமகள் ஆகியோரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அலி காமேனி உயிரிழந்ததையடுத்து ஈரானில் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற இருந்த 10 மற்றும் 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் சி.பி.எஸ்.இ. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com