பிரான்ஸ் அதிபர் மனைவி ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவரா? - பரபரப்பு தகவல்

பிரான்ஸ் அதிபரின் மனைவி ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவர் என்று அமெரிக்க வலதுசாரி அரசியல் விமர்சகர் குற்றம்சாட்டினார்.
பாரீஸ்,
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் (வயது 47) பள்ளிப்பருவ ஆசிரியர் பிரிஜிட் (72). அவருக்கு ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் இருந்தன. இந்தநிலையில் மேக்ரானுக்கும், அவருக்கும் காதல் ஏற்பட்டது. இதனால் கணவரை பிரிந்த அவர் 2007-ம் ஆண்டு மேக்ரானை மணந்தார். அவர்களது திருமணத்துக்கு அப்போதே கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
அதனை கண்டுகொள்ளாமல் இருவரும் தங்களது வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். ஆனால் சமீபத்தில் பிரிஜிட் ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவர் என்று அமெரிக்க வலதுசாரி அரசியல் விமர்சகரான கேண்டஸ் ஓவன்ஸ் குற்றம்சாட்டினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிஜிட் அமெரிக்க கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடுத்துள்ளார்.
இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கர்ப்பமாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் தான் ஒரு பெண் என்பதற்கான அறிவியல் பூர்வமான ஆதாரங்களை கோர்ட்டில் அவர் தாக்கல் செய்ய உள்ளார். இதற்கு முன்னரும் இதேபோன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டபோது கோர்ட்டில் வழக்கு தொடுத்து பிரிஜிட் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.






