ஹெலிகாப்டர் மீது மோதிய பயணிகள் விமானம்: அதிர்ச்சி வீடியோ - 28 பேரின் உடல்கள் மீட்பு

அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் மீது பயணிகள் விமானம் மோதிய விபத்தில் மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஹெலிகாப்டர் மீது மோதிய பயணிகள் விமானம்: அதிர்ச்சி வீடியோ - 28 பேரின் உடல்கள் மீட்பு
Published on

வாஷிங்டன் டிசி,

அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் நடுவானில் பிளாக் ஹாக் எனப்படும் ராணுவ ஹெலிகாப்டர் மீது அமெரிக்கன் ஏர்லைன்சின் பயணிகள் விமானம் ஒன்று பயங்கரமாக மோதியது. ரோனால்ட் ரீகன் விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் மீது விமானம் மோதி விபத்து ஏற்பட்டது. முன்னதாக கன்சாசிலிருந்து பறந்த வந்த பயணிகள் விமானம் அங்கு தரையிறங்க இருந்தது.

விபத்துக்குள்ளான விமானத்தில் 64 பேரும், ஹெலிகாப்டரில் 3 ராணுவ வீரர்களும் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. விமானம் மற்றும் ஹெலிகாப்டர் இரண்டும் போடோமாக் என்ற ஆற்றில் விழுந்தநிலையில் தற்போது மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மீட்புக் குழுக்கள் மூலம் இதுவரை போடோமாக் ஆற்றில் இருந்து 28 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விபத்து நிகழ்ந்தது எப்படி? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவசர நடவடிக்கையாக அனைத்து விமானங்களும் தரையிறக்கப்பட்டுள்ளன.

ஹெல்ப்லைன் எண்கள்

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் 800-679-8215 என்ற கட்டணமில்லா எண்ணை வெளியிட்டுள்ளது.

கூடுதல் தொலைபேசி எண்களுக்கு அமெரிக்காவிற்கு வெளியில் இருந்து அழைப்பவர்கள் news.aa.com ஐப் பார்வையிடலாம்.

கனடா, புவேர்ட்டோ ரிக்கோ அல்லது அமெரிக்க விர்ஜின் தீவுகளில் உள்ள விபத்தில் தொடர்புடைய குடும்ப உறுப்பினர்கள் 800-679-8215 ஐ நேரடியாக அழைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com