ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாட்டுக்கான சர்வதேச கூட்டமைப்பில் இந்தியாவை இணைக்க முடிவு

ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாட்டுக்கான சர்வதேச கூட்டமைப்பில் இந்தியாவை இணைக்க வாசினார் கூட்டமைப்பு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாட்டுக்கான சர்வதேச கூட்டமைப்பில் இந்தியாவை இணைக்க முடிவு
Published on

புதுடெல்லி,

பேரழிவு ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை பிற நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதற்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் சர்வதேச கூட்டமைப்பான வாசினார் கூட்டமைப்பில் இந்தியாவும் ஓர் உறுப்பு நாடாக இணைய உள்ளது.

ஆஸ்திரிய நாட்டின் தலைநகர் வியன்னாவில் நடைபெற்ற கூட்டத்தில் அந்த அமைப்பில் இடம் பெற்று இருக்கும் நாடுகள் அனைத்தும் இதற்கான அனுமதியை தந்துள்ளன. இதையடுத்து வாசினார் கூட்டமைப்பில் இணையும் 42 வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

வாசினார் கூட்டமைப்பு என்றால் என்ன?

வல்லரசு நாடுகள் தங்கள் நட்பு நாடுகளுக்கு ஆயுதம் மற்றும் அதன் தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்வதை தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு இந்த வாசினார் கூட்டமைப்பு ஆகும். இந்த அமைப்பில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், அர்ஜெண்டினா உள்ளிட்ட 41 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com