ஈரானை முடிக்கப்போகிறோம் - டிரம்ப்

மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது படை வீரர்களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்த பரிசீலிப்பதாக கூறப்படுகிறது.
ஈரானை முடிக்கப்போகிறோம் - டிரம்ப்
Published on

வாஷிங்டன்,

ஈரான் மீது கடந்த மாதம் 28-ந்தேதி போரை தொடங்கிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவம், அந்த நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியை படுகொலை செய்தது.

அதைத்தொடர்ந்து வளைகுடா பிராந்தியம் முழுவதும் மூண்டுள்ள போரில் ஈரானில் 1,400-க்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்டு உள்ளனர். இதில் அரசு மற்றும் ராணுவத்தின் முக்கிய தலைவர்களும் உயிரிழந்து உள்ளனர்.

இந்த போர் 3வது வாரமாக நடந்து வருகிறது. நாளுக்கு நாள் போரின் வீரியம் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஈரானின் கேஸ் வயலை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. அதற்கு பதிலடியாக ஈரானும், கத்தாரின் கேஸ் வயலை குறிவைத்து தாக்குதலை நடத்தி உள்ளது.

இந்நிலையில்,ஹார்முஸ் ஜலசந்தியை கைப்பற்றுவது உள்பட ஈரான் மீது தரை வழியாக தாக்குதல் நடத்துவது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது. அதன்படி மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது படை வீரர்களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்த பரிசீலிப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, ஈரான் மீதான ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அந்நாட்டின் எஞ்சியுள்ள இலக்குகளை விரைவில் முடிக்கப்போவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாக்க போர் கப்பல்களை அனுப்பாத நட்பு நாடுகளுக்கும் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com