தகவல் தொடர்பு தவறால் இந்திய கப்பலை தாக்கிவிட்டோம்- ஈரான் விளக்கம்

ஹோர்முஸ் ஜலசந்தியை திறப்பதாக ஈரான் நேற்று முன்தினம் அறிவித்தது. இதையடுத்து 14 கப்பல்கள் இந்தியாவை நோக்கி புறப்பட்டன.
தகவல் தொடர்பு தவறால் இந்திய கப்பலை தாக்கிவிட்டோம்-
ஈரான் விளக்கம்
Published on

இதற்கிடையே அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடர்ந்ததால் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடுவதாக நேற்று ஈரான் அறிவித்தது. மேலும் ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க முயன்ற 2 இந்திய கப்பல்கள் மீது ஈரான் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதனால் இந்திய கப்பல்கள் திரும்பிச் சென்றன. இச்சம்பவத்தையடுத்து டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது பதாலியை அழைத்து மத்திய அரசு தனது கண்டனத்தை தெரிவித்தது.

மேலும் ஈரான் தூதருடன் வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது ஹோர்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடக்க, 21 கப்பல்களின் பட்டியலை ஏற்கனவே ஈரான் அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து இந்திய கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது தொடர்பாக ஈரான் தூதர் விளக்கம் அளித்தார். இந்திய கப்பல்கள் மீதான தாக்குதல் எந்த உள்நோக்கத்துடனும் நடத்தப்படவில்லை. இந்தச் சம்பவம் வேண்டுமென்றே செய்யப்படவில்லை. இது தகவல் தொடர்பு இடைவெளியால் ஏற்பட்டுவிட்டது என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com