நேட்டோ நாடுகளின் உதவி எங்களுக்கு தேவையில்லை: அமெரிக்க அதிபர் டிரம்ப்

எங்களுக்குத் தேவைப்பட்டபோது, அவர்கள் முற்றிலும் பயனற்றவர்களாக இருந்தார்கள் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
நேட்டோ நாடுகளின் உதவி எங்களுக்கு தேவையில்லை: அமெரிக்க அதிபர் டிரம்ப்
Published on

ஈரான் - அமெரிக்கா இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ளது. முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், விரைவில் 2-ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை திறக்காமல் வைத்து இருந்த ஈரான், லெபனான் - இஸ்ரேல் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகு, ஜலசந்தி வழியாக அனைத்து நாடுகளின் வர்த்தக கப்பல்களும் செல்லலாம் என்று தெரிவித்துள்ளது. இந்த்

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: - ஹார்முஸ் ஜலசந்தி பிரச்சினை ஏறக்குறைய முடிந்துவிட்ட நிலையில், எங்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமா என்று கேட்டு, நேட்டோவிலிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பு உங்கள் உதவி தேவைப்பட்டிருக்கும்.

ஆனால் இப்போது எனக்கு உங்கள் உதவி உண்மையிலேயே தேவையில்லை என்று அவர்களிடம் கூறினேன். ஏனென்றால் எங்களுக்குத் தேவைப்பட்டபோது, அவர்கள் முற்றிலும் பயனற்றவர்களாக இருந்தார்கள். ஆனால் உண்மையில், எங்களுக்கு நேட்டோ தேவைப்படவே இல்லை. நேட்டோவுக்குத்தான் நாங்கள் தேவைப்படுகிறோம்” என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com