

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பதற்றம் தணிந்தபாடில்லை. தற்காலிக போர் நிறுத்தம் நாளையுடன் முடிவுக்கு வரும் நிலையில், இன்று பாகிஸ்தானில் அமைதிப்பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்கா குழு புறப்படும் என்று டிரம்ப் நேற்றே கூறியிருந்தார். எனினும், ஈரான் பங்கேற்குமா என்பது உறுதியாகவில்லை. ஈரானிய துறைமுகங்களை அமெரிக்க கப்பல்கள் முற்றுகையிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியது.
இந்த நிலையில், ஈரானிய கப்பலை சிறைபிடித்துள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை மீறி செல்ல முயன்ற ஈரானிய சரக்கு கப்பலை சிறைபிடித்து உள்ளோம் என்றுகூறியுள்ளார். இது தொடர்பாக தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் டிரம்ப் பதிவிட்டதாவது:
ஈரான் கொடியுடன் சென்ற ‘டூஸ்கா’ என்ற சரக்கு கப்பல், சுமார் 900 அடி நீளமும், ஒரு விமானம் தாங்கி கப்பலுக்கு நிகரான எடையும் கொண்டதாக இருந்து. அமெரிக்காவின் கப்பல் முதலில் நிறுத்துமாறு எச்சரிக்கை வழங்கியதாகவும், ஆனால் ஈரான் கப்பல் குழுவினர் அதை பின்பற்ற மறுத்தது. எங்கள் கடற்படை கப்பல், அந்த கப்பலின் எஞ்சின் அறையில் துளை ஏற்படுத்தி அதை அங்கேயே நிறுத்தியது. தற்போது, அந்த கப்பல் அமெரிக்க கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது,” என்று டிரம்ப் தெரிவித்தார்.மேலும், அந்த கப்பல் முன்பு சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபட்டதற்காக அமெரிக்க நிதித்துறை விதித்த தடைகளின் கீழ் இருந்ததாகவும் அவர் கூறினார்.