பெண் உதவியாளர்களுக்கு தலா ரூ.45 லட்சம் பரிசு வழங்கிய டிரம்ப்

வெள்ளை மாளிகையின் அறிக்கையின்படி இவர்கள் மூவரும் ஆண்டுக்கு ரூ.1.35 கோடி சம்பளமாக பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
 ரூ.45 லட்சம் பரிசு வழங்கிய டிரம்ப்
டிரம்ப்
Published on

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் வெள்ளை மாளிகையில் இருந்து கசிந்துள்ள ரகசிய சொத்து விவரம் உலக அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தனது மூன்று பெண் உதவியாளர்களுக்கு, கடந்த கிறிஸ்துமஸ் விடுமுறையின்போது தலா ரூ.45 லட்சத்தை டிரம்ப் ரொக்கமாக வழங்கியுள்ளார் என்ற உண்மை அம்பலமாகியுள்ளது.

வெள்ளை மாளிகையின் சிறப்பு மற்றும் நிர்வாக உதவியாளராகப் பணியாற்றும் நட்டாலி ஹார்ப், ஊடக ஆலோசகர் மார்கோ மார்ட்டின் மற்றும் ஓவல் அலுவலக துணை இயக்குனர் சேம்பர் லெய்ன் ஹாரிஸ் ஆகிய மூவருமே இந்த பெருந்தொகையைப் பெற்றுள்ளனர்.

வெள்ளை மாளிகையின் அறிக்கையின்படி இவர்கள் மூவரும் ஆண்டுக்கு ரூ.1.35 கோடி சம்பளமாக

பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. டிரம்பின் நிழல் போலச் செயல்படும் நட்டாலி ஹார்ப், சமூக ஊடகப் பதிவுகளைத் தட்டச்சு செய்வது மற்றும் இணையச் செய்திகளை அச்சிட்டு வழங்குவது போன்ற பணிகளைச் செய்கிறார்.

சமீபத்தில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் டிரம்பை விமர்சித்தபோது நட்டாலியின் பெயரை அவருடன் தொடர்புப்படுத்தி பேசியிருந்தனர். அரசுப் பதவியில் இருப்பவர்களுக்கு இவ்வளவு பெரிய தொகையை ரொக்க மாக வழங்குவது சட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டதா? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி யுள்ளன. இது பொதுப்பணமா? அல்லது டிரம்பின் சொந்தப் பணமா? என்ற விவாதம் எழுந்துள்ள நிலையில், இது தனது அதிகாரப்பூர்வப்பணிகளுக்கு அப்பாற்பட்டு,

சொந்த முறையிலேயே டிரம்ப் வழங்கியதாக வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது இந்த மூன்று பேருக்கும் தலா ரூ.45 லட்சம் வழங்கப்பட்ட தகவல் தற்போது கசிந்துள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com