அமெரிக்காவிற்கு மரண அடி கொடுப்போம்: ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் எச்சரிக்கை

அமெரிக்கா - ஈரான் இடையே நடைபெற்ற இரு சுற்றுப் பேச்சுவார்த்தைகளிலும் சுமுக உடன்பாடு ஏற்படவில்லை.
அமெரிக்காவிற்கு மரண அடி கொடுப்போம்: ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் எச்சரிக்கை
Published on

ஈரான்,

ஈரான் அணு ஆயுத தயாரிப்பை நிறுத்த வேண்டும்; அதற்கான யுரேனியம் செறிவூட்டலையும் முழுமையாக நிறுத்த வேண்டும். நீண்ட தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைத் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும். மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் தனது கிளர்ச்சி படைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடவும் ஈரானை வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக அமெரிக்கா - ஈரான் இடையே நடைபெற்ற இரு சுற்றுப் பேச்சுவார்த்தைகளிலும் சுமுக உடன்பாடு ஏற்படவில்லை. அதைத் தொடர்ந்து, ஈரான் உடனடியாக ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் மோசமான பேரழிவைச் சந்திக்க நேரிடும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்தார். ஈரானைச் சுற்றி அமெரிக்க போர்க்கப்பல்கள் விரைந்தன.

இதனால் ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற பதற்றம் நிலவிய நிலையில், நேற்று இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து தாக்குதலை நடத்தின. ஈரானில் தலைநகர் தெஹ்ரான் உள்பட பல இடங்களில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. காமேனி கொல்லப்பட்டதால் ஈரானில் போராட்டம் வெடித்துள்ளது. ஈரான் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

இந்த நிலையில், கமேனியை கொன்ற அமெரிக்காவிற்கு மரண அடி கொடுப்போம் என்று ஈரான் சபாநாயகர் முகமது பாகெர் கலிபாப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “அமெரிக்காவும் இஸ்ரேலும் சிவப்புக்கோட்டைத் தாண்டிவிட்டன, அதற்கான விலையை அவர்கள் கொடுத்தே ஆக வேண்டும். கமேனியை கொன்ற அமெரிக்காவிற்கு மரண அடி கொடுப்போம்.

ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும். இந்தப் போர் ஈரானின் வாழ்வா சாவானப் போர் மட்டுமல்ல, இறுதிப் பழிவாங்கலுக்கான போர். நெதன்யாகு மற்றும் ட்ரம்ப்பிற்கு நான் சொல்வது இதுதான்; நீங்கள் கெஞ்சும் அளவிற்கு வலிமைமிக்க அடிகளை உங்கள் மீது தொடுப்போம். அதை நீங்கள் விரைவில் காண்பீர்கள்” என கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com