ஹார்முஸ் ஜலசந்தியை எந்த நாடும் கட்டுப்படுத்த விட மாட்டோம்: அமெரிக்க அதிபர் டிரம்ப்

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் சுங்க கட்டணம் வசூலிக்க திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
டொனால்டு டிரம்ப்
Published on

வாஷிங்டன்,

மேற்காசிய போரால் ஹார்முஸ் ஜலசந்தியில் தொடர்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பதற்றம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்தார். இது குறித்து டிரம்ப் கூறியதாவது: ஹார்முஸ் ஜலசந்தி அனைவருக்கும் திறந்திருக்கும். இவை சர்வதேச கடல் பகுதிகள். இதை யாரும் கட்டுப்படுத்த முடியாது.

இது தற்போது நாம் நடத்தி வரும் பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாகும். ஓமான் மற்ற நாடுகளைப் போல நடந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் அதை நாங்கள் அழித்து விட வேண்டிய நிலை ஏற்படும். அதை அவர்கள் நன்றாக புரிந்துகொண்டுள்ளனர்,” என்றார்.

ஈரானின் புதிய திட்டம்

ஹார்முஸ் நீரிணையில் தனது அதிகாரத்தை நிலைநாட்ட முயலும் ஈரான், அந்த வழியாக செல்லும் கப்பல்களிடமிருந்து கட்டணம் வசூலித்து, அதன் வருவாயை ஓமனுடன் பகிர்ந்து கொள்ளும் திட்டத்தையும் முன்வைத்துள்ளது. இதனை அடுத்தே டிரம்ப் மேற்கண்டவாறு எச்சரித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com