இலங்கையில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தவர்களுக்கு மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே இரங்கல்!

பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே, வன்முறையில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தவர்களுக்கு மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே இரங்கல்!
Published on

கொழும்பு,

இலங்கையில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ள மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே, வன்முறையில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள நமல் ராஜபக்சே தனது டுவிட்டரில் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது:-

பயங்கரமான சூழ்நிலையில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். குறிப்பாக, அமரகீர்த்தி அத்துகோரல அவர்களுடைய மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கல். எல்லா வகையிலும் அவர் ஒரு நல்ல மனிதர். 

இந்த அளவிற்கு விஷயங்கள் சென்றது வருத்தமளிக்கிறது. வன்முறையை நிறுத்துவோம்! என்று அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும், தனது தந்தை மகிந்த ராஜபக்சே பாதுகாப்பாகவும் குடும்பத்துடன் தொடர்பிலும் உள்ளார், நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் ஒருபோதும் தங்கள் குடும்பத்துக்கு இல்லை என அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com