‘ஈரான்-இஸ்ரேல் போரில் நேரடியாக பங்கேற்க மாட்டோம்’ - துருக்கி அதிபர் எர்டோகன்

நாட்டின் பாதுகாப்பே எங்களது முன்னுரிமை என துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
‘ஈரான்-இஸ்ரேல் போரில் நேரடியாக பங்கேற்க மாட்டோம்’ - துருக்கி அதிபர் எர்டோகன்
Published on

அங்காரா,

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழி தாக்குதல் நடத்தின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

மேலும், ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். அதோடு, ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருவதுடன், மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்ற நிலை காணப்படுகிறது. கத்தார், ஈராக்கின் குர்திஸ்தான், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கிடையில் துருக்கி மீது ஏவப்பட்ட ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகளை துருக்கியின் வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்தது. இந்த சூழலில், ஈரான்-இஸ்ரேல் போரில் துருக்கி பங்கேற்காது என அந்நாட்டின் அதிபர் எர்டோகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “எங்கள் வான்வெளியை பாதுகாப்பதற்கான அனைத்து தற்காப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஈரான்-இஸ்ரேல் இடையிலான போரில் துருக்கி நேரடியாகப் பங்கேற்காது. எங்கள் நாட்டின் பாதுகாப்பே எங்களது முன்னுரிமையாகும்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com