

வாஷிங்டன்,
ஆப்பிரிக்க நாடுகளான கினியா, காங்கோ ஜனநாயக குடியரசு, சியர்ரா லியோன் மற்றும் லைபீரியா உள்ளிட்ட நாடுகளில் எபோலா நோய் பரவல் அதிகரித்து வருகிறது.
கினியாவில் எபோலாவுக்கு கடந்த ஞாயிற்று கிழமை 4 பேர் உயிரிழந்தனர். 7 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். லைபீரிய எல்லை அருகே 7 பேருக்கு டயோரியா, வாந்தி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன.
இந்நிலையில் ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் எபோலா நோயை கட்டுப்படுத்த அனைத்து உதவிகளையும் வழங்குவோம் என அமெரிக்கா அறிவித்து உள்ளது. அந்நாட்டின் வெள்ளை மாளிகை பெண் செய்தி தொடர்பு நிர்வாகி ஜென் சகி கூறும்பொழுது, பாதிக்கப்பட்ட அரசுகள், உலக சுகாதார அமைப்பு, ஆப்பிரிக்க யூனியன் மற்றும் ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் ஆகியவற்றுடன் இணைந்து எபோலாவை கட்டுப்படுத்த பைடன் தலைமையிலான நிர்வாகம் பணியாற்றும் என கூறியுள்ளார்.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன், கினியா, காங்கோ ஜனநாயக குடியரசு, சியர்ரா லியோன் மற்றும் லைபீரியா ஆகிய நாடுகளுக்கான அமெரிக்க தூதர்களை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட நாடுகளின் அரசாங்கங்களுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயாராக உள்ளது என எடுத்து கூறினார் என்றும் சகி தெரிவித்து உள்ளார்.