அமெரிக்க-இஸ்ரேல் தளபதிகள், அதிகாரிகளின் வீடுகளை தாக்குவோம்: ஈரான் சபதம்

அமெரிக்க-இஸ்ரேல் தளபதிகள், அதிகாரிகளின் வீடுகளை தாக்குவோம்: ஈரான் சபதம்
அமெரிக்க-இஸ்ரேல் தளபதிகள், அதிகாரிகளின் வீடுகளை தாக்குவோம்:  ஈரான் சபதம்
Published on

தெஹ்ரான்

ஈரானில் ராணுவம் மற்றும் இஸ்லாமிய புரட்சி காவல் படைகளுக்கு இடையே நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் உச்சபட்ச கட்டுப்பாட்டு பிரிவாக மத்திய கதம் அல்-அன்பியா தலைமையகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அதன் செய்தி தொடர்பாளர் வெளியிட்டு உள்ள செய்தியில், மோதல் அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் எதிரிகளின் தளபதிகள், அதிகாரிகளின் வீடுகளை தாக்குவோம் என எச்சரித்து உள்ளார்.

ஈரானின் பாரசீக வளைகுடா உள்ளிட்ட பகுதிகளை ஆக்கிரமிப்போம் என்றும் தரை வழி தாக்குதல்களில் ஈடுபடுவோம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி அச்சுறுத்தல்களை விடுத்து வருகிறார் என இந்த உச்சபட்ச கட்டுப்பாட்டு பிரிவின் தலைமையகம் தொடர்ந்து கூறி வந்தது. இதனை தொடர்ந்து இந்த அறிக்கை வெளியாகி உள்ளது.

Also Read
போர் தொடுத்தவர்களின் வேண்டுதல்களை இறைவன் கவனிக்க மாட்டார்: போப் லியோ
அமெரிக்க-இஸ்ரேல் தளபதிகள், அதிகாரிகளின் வீடுகளை தாக்குவோம்:  ஈரான் சபதம்

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள், தலைவர்கள், தளபதிகள் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர்.

இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்ற நிலை காணப்படுகிறது. ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் உலக அளவில் பொருளாதார பாதிப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com