

அமெரிக்காவுடனான போரின் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால் சர்வதேச அளவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டது. ஈரான் போர் நிறுத்தத்தை ஏற்காவிட்டால் அந்த நாட்டை முற்றிலும் அழித்துவிடுவோம் என்று டிரம்ப் எச்சரித்தார். மேலும், 2 நாள் கெடுவும் விதித்து இருந்தார். இந்த கெடு காரணமாக 2 வார கால போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஈரான் சம்மதித்தது.
இதையடுத்து ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரான் ஒப்புக்கொண்டது. இதனிடையே, லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தாவிட்டால் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவோம் என்று ஈரான் எச்சரித்துள்ளது. இதனால், மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.