உக்ரைனுக்கு தொடர்ந்து ராணுவ உதவிகளை வழங்குவோம் - அமெரிக்கா அறிவிப்பு

உக்ரைனுக்கு தொடர்ந்து ராணுவ உதவிகளை வழங்குவோம் என அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு தொடர்ந்து ராணுவ உதவிகளை வழங்குவோம் - அமெரிக்கா அறிவிப்பு
Published on

நியூயார்க்,

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

ரஷிய அதிபர் புதின் மற்றும் அவரது பொறுப்பற்ற வார்த்தைகள் மற்றும் அச்சுறுத்தல்களால் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பயப்படப் போவதில்லை. புதினின் செயல்பாடுகள் அவர் போராடிக்கொண்டிருப்பதற்கான அறிகுறியாகும். அவரால் அண்டை நாட்டின் நிலப்பரப்பைக் கைப்பற்றி அதிலிருந்து தப்பிக்க முடியாது. உக்ரைனுக்கு நாங்கள் தொடர்ந்து ராணுவ தளவாடங்களை வழங்குவோம்.

"நேட்டோ பிராந்தியத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாக்க அமெரிக்கா எங்கள் நேட்டோ நட்பு நாடுகளுடன் இணைந்து முழுமையாக தயாராக உள்ளது. எனவே மிஸ்டர் புதின், நான் சொல்வதை தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்... நான் எங்கள் நட்பு நாடுகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறேன். இன்றும் புதிய தடைகளை அறிவிக்கிறோம் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com