அமெரிக்காவின் பிடியில் இருந்து விலகத் துடிக்கும் மேற்குலக நாடுகள்?


அமெரிக்காவின் பிடியில் இருந்து விலகத் துடிக்கும் மேற்குலக நாடுகள்?
x

டென்மார்க் நாட்டின் அங்கமாக உள்ள கிரீன்லாந்தை கைப்பற்ற டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதுமுதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, பல்வேறு நாடுகள் மீது அதிரடியாக வரி விதித்து வருகிறார். மேலும், பல நாடுகள் மீது கூடுதல் வரி விதிப்பேன் என்று மிரட்டல் விடுத்து வருகிறார்.

அதேவேளை, அமெரிக்கா விதித்த வரியில் தளர்வை மேற்கொள்ள அந்தந்த நாடுகள் அமெரிக்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. மேலும், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளவும் முயற்சித்து வருகின்றன. இதனிடையே, டென்மார்க் நாட்டின் அங்கமாக உள்ள கிரீன்லாந்தை கைப்பற்ற டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.

கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றவில்லையென்றால் சீனா, ரஷியா கைப்பற்றிவிடும் என அவர் கூறி வருகிறார். ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா மற்றும் உலக அமைதிக்கு கிரீன்லாந்து தங்கள் வசம் இருப்பது முக்கியம் என்று டிரம்ப் கூறி வருகிறார். மேலும், இந்த நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்கவில்லையென்றால் கூடுதல் வரிவிதிப்பேன் என்று ஐரோப்பிய நாடுகளை டிரம்ப் மிரட்டி வருகிறார். டிரம்ப்பின் பேச்சுக்கு ஐரோப்பிய யூனியனில் இடம்பெற்றுள்ள நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், பிரான்ஸ், கனடா தலைவர்களை தொடர்ந்து ஜெர்மனி அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ், உலக பொருளாதார மன்றத்தில் அதிரடி முழக்கத்தை எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “வல்லரசுகளின் அதிகாரப் போட்டி நிறைந்த புதியயுகத்திற்குள் நாம் நுழைந்துவிட்டோம். சீனா பெரும்சக்தியாக உருவெடுத்துள்ளது; அமெரிக்கா தனது கொள்கைகளை மாற்றி வருகிறது.

இனி மற்றவர்களைச் சார்ந்து இருப்பது நமக்கு ஆபத்து. ஐரோப்பா தன்னைத்தானே தற்காத்துக் கொள்ளும் சுயசார்பு நிலையை அடைய வேண்டும்.யதார்த்தத்தை ஏற்று புதிய பாதையை வகுப்போம். எந்த மிரட்டல்களுக்கும் ஐரோப்பா நிச்சயம் அடிபணியாது. அப்படி ஒரு சூழல் வந்தால், எங்களின் | பதிலடி மிகவும் உறுதியானதாக இருக்கும். எந்தச் சவாலையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராகிவிட்டோம்” என்று தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்காவின் பிடியில் இருந்து மேற்குலக நாடுகள் விலகத் திட்டமிட்டுள்ளன.

1 More update

Next Story