விண்வெளியில் இருந்து ராமர் பாலம்: ஐரோப்பிய ஏஜென்சி வெளியிட்ட படம் வைரல்

ராமேஸ்வரம் தீவிலிருந்து, இலங்கையின் மன்னார் தீவுப்பகுதிக்கு இடையே ராமர் பாலம் அமைந்துள்ளது.
விண்வெளியில் இருந்து ராமர் பாலம்: ஐரோப்பிய ஏஜென்சி வெளியிட்ட படம் வைரல்
Published on

லண்டன்,

விண்வெளியில் இருந்து செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட, இந்தியா - இலங்கை இடையிலான ராமர் பாலத்தின் படத்தை ஐரோப்பிய ஏஜென்சி வெளியிட்டது. இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியா - இலங்கை இடையே, கடலுக்கடியில் 48 கிலோ மீட்டர் தொலைவுக்கு, இந்தியாவின் தென்கிழக்குத் தீவுப்பகுதியான ராமேஸ்வரம் தீவிலிருந்து, இலங்கையின் மன்னார் தீவுப்பகுதிக்கு இடையே ராமர் பாலம் அமைந்துள்ளது.

இந்த்நிலையில், ராமர் பாலத்தை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் கோப்பர்நிக்கஸ் சென்டினெல் - 2 செயற்கைக்கோள் புகைப்படம் எடுத்து ஆய்வு மையத்துக்கு அனுப்பியிருக்கிறது. இந்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் ஐரோப்பிய ஏஜென்சி வெளியிட்டது.

ராமர் பாலத்தில் இருக்கும் மண் அமைப்புகள் உலர்ந்து காணப்படுகிறது. இங்கு கடலின் ஆழமே ஒன்று முதல் 10 மீட்டர் வரைதான் உள்ளது என ஐரோப்பிய ஏஜென்சி தெரிவித்துள்ளது.

பாலம் எப்படி உருவானது என்பது பற்றி பல கோட்பாடுகள் இருந்தாலும், புவியியல் சான்றுகள்படி இந்த சுண்ணாம்புக் கற்கள் ஒரு காலத்தில் இந்தியாவை இலங்கையுடன் இணைத்த நிலத்தின் எச்சங்கள் என்று புவியியல் சான்றுகள் கூறுகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com