#லைவ் அப்டேட்ஸ் : உக்ரைன் தாக்கிய போர்க்கப்பல் - மிதக்கும் நிலையில் உள்ளது என ரஷ்யா அறிவிப்பு

மொஸ்க்வா என்ற கப்பலில் இருந்து வெடிமருந்துகள் வெடித்து சிதறியதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
#லைவ் அப்டேட்ஸ் : உக்ரைன் தாக்கிய போர்க்கப்பல் - மிதக்கும் நிலையில் உள்ளது என ரஷ்யா அறிவிப்பு
Published on

கீவ்,



உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் 50-வது நாளாக நீடித்து வருகிறது. உக்ரைன் - ரஷியா இடையே நீடித்து வரும் போர் குறித்த முக்கிய செய்திகள் பின்வருமாறு:-

ஏப்ரல் 14, 11.00 PM

உக்ரைன் தாக்கிய போர்க்கப்பல் - மிதக்கும் நிலையில் உள்ளது என ரஷ்யா அறிவிப்பு

ரஷியாவின் ஏவுகணை தாங்கிய மோஸ்க்வா போர்க்கப்பல், உக்ரேன் தயாரித்த நெப்டியூன் ஏவுகணையால் குண்டுவெடிப்புக்கு உள்ளானதாக, யுக்ரேன் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இதுகுறித்து ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "கப்பலில் ஏற்பட்ட தீ தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. கப்பலில் இருந்த வெடிமருந்துகள் தற்போது வெடிக்கவில்லை.

அந்த கப்பல் தற்போது மிதக்கும் நிலையில் உள்ளது. ஏவுகணையின் முக்கிய ஆயுதக் கிடங்கு சேதமடையவில்லை.

கப்பலில் இருந்த பணிக்குழுவினர் அருகிலுள்ள கருங்கடல் கடற்படை கப்பல்களுக்கு வெளியேற்றப்பட்டனர். அக்கப்பலை துறைமுகத்திற்கு கட்டி இழுத்துச் செல்லும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கப்பலில் தீப்பற்றியதற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உக்ரைனின் நெப்டியூன் ஏவுகணை தாக்கிய பின் அக்கப்பல் மூழ்க ஆரம்பித்துவிட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 14, 1.47 PM 18:00

எல்லையோர நகரங்களில் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் மீது ரஷியாவின் பிரையன்ஸ்க் மாகண கவர்னர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். உக்ரைனின் இந்த தாக்குதலில் 10 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயம் அடைந்து இருப்பதாகவும் கண்டனம் தெரிவித்தார்

ஏப்ரல் 14, 1.47 PM 15:00

AFP News Agency (@AFP) April 14, 2022

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com