வாட்ஸ் அப் இனி இந்த மாடல் போன்களில் இயங்காது: பயனர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் 5.1 போன்ற ஓல்டு வெர்ஷன்களில் இனி வாட்ஸ் அப் இயங்காது
Image Credits: AI
Image Credits: AI
Published on

ஆண்ட்ராய்டு 6.0-க்கும் குறைவான இயங்குதளங்களில் இயங்கும் ஸ்மார்ட்போன்களில், வரும் செப்டம்பர்-8 ஆம் தேதி முதல் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படும் என்று மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. தொழில்நுட்ப அம்சம் மற்றும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு வழங்குவதற்காக, ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் 5.1 போன்ற ஓல்டு வெர்ஷன்களில் இனி வாட்ஸ் அப் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பாதுகாப்பு வசதிகள் மற்றும் கூடுதல் அம்சங்களை வழங்க பழைய இயங்குதளம் மற்றும் ஹார்டுவேர் போதுமானதாக இல்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பயனர்களுக்கு ஏற்கெனவே இதுதொடர்பாக எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு விட்டதாகவும் மெட்டா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் தங்கள் உரையாடல்கள், இமேஜ்கள் உள்ளிட்டவை இழப்பு ஏற்படாமல் தடுக்க முன்கூட்டியே புதிய வெர்ஷன்களுக்கு மாறிக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com