

நியூயார்க்,
உலகையே திரும்பி பார்க்கவைத்த இந்த சந்திப்பின்போது அணு ஆயுத விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது என இருநாட்டு தலைவர்களும் உறுதிபூண்டனர். ஆனால் இந்த சந்திப்பு நடந்து 3 வாரங்களுக்கு மேலாகியும் இன்னும் இருதரப்பு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை.
இந்த நிலையில் அடுத்த 2 வாரங்களுக்குள் வடகொரியா உடனான பேச்சுவார்த்தை தொடங்கும் என அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து அவர் கூறியதாவது:
அணு ஆயுத விவகாரம் தொடர்பாக வடகொரியா உடனான உயர்மட்ட பேச்சுவார்த்தை 2 வாரங்களில் தொடங்கும் என நம்பிக்கை உள்ளது. வடகொரியா அணுஆயுதமற்ற நாடாக மாற்றப்படும் என அந்நாட்டு தலைவர் கிம் ஜாங் அன் உறுதி அளித்துள்ளார். அந்த வாக்குறுதியை அவர் எழுத்துப்பூர்வமாக கொடுக்கவில்லை. ஜனாதிபதி டிரம்பிடம் நேரடியாக தெரிவித்துள்ளார். எனவே அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு அந்நாட்டு மக்களுக்கு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.