

இஸ்லாமாபாத்
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உறவில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்த 72 மணி நேரம் மிகவும் முக்கியமானது என்று பாகிஸ்தானின் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் தெரிவித்துள்ளார்.
போர் மூளுமா, அமைதி திரும்புமா என்பது அடுத்த 72 மணி நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கு இடையே போர் மூண்டால், இரண்டாம் உலகப் போரை விட மிகப் பெரியதாக இருக்கும் என்றும், அதுவே இறுதியான போராக இருக்கும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
அவசர கால சட்டங்களுக்கு ஏற்ப ரயில்வே துறை ஏற்கனவே செயல்பட்டு வருவதாகவும் ஷேக் ரஷீத் கூறினார்.