குஜராத்தில் பாரதீய ஜனதாவுக்கு வெற்றியா? தோல்வியா? காத்திருக்கும் சீனா

குஜராத்தில் பாரதீய ஜனதாவுக்கு வெற்றி கிடைக்குமா அல்லது தோல்வி கிடைக்குமா என ஆவலுடன் காத்திருக்கிறது சீனா.
குஜராத்தில் பாரதீய ஜனதாவுக்கு வெற்றியா? தோல்வியா? காத்திருக்கும் சீனா
Published on

பீஜிங்

குஜராத் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்து உள்ளது. இந்தத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கே மீண்டும் வெற்றிவாய்ப்பு கிடைக்கும் என தேர்தலுக்குப் பிந்தையக் கருத்துக் கணிப்புகள் தெரிவித்து உள்ளன.

குஜராத் தேர்தல் முடிவு பிரதமர் மோடியின் நடவடிக்கைகள் மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா என்பதை வெளிக்காட்டும் ஒரு கருவியாக அமையும். இந்தத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு வெற்றி கிடைத்தால், மத்திய அரசு மேலும் சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆகவே, இந்தத் தேர்தல் முடிவை சீனாவும் எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. ஏனெனில், இந்தியாவில் எடுக்கப்படும் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள் சீனாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சீன நிறுவனங்களான ஜியோமி, ஓப்போ போன்றவை இந்தியாவில் தொழில் நடத்தி வருகின்றன.

இது தொடர்பாக சீனா அரசின் ஊடகமான குளோபல் டைம்ஸ் கூறியுள்ளதாவது:-

"குஜராத்தில் பா.ஜ.க அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றால், இந்திய அரசு தொடர்ந்து சில பொருளாதார நடவடிக்கைகளை துணிந்து எடுக்கக்கூடும். அதேநேரத்தில், தோல்வியோ அல்லது வெற்றி கிடைத்தும் வாக்கு சதவிகிதம் குறைந்தாலோ அவற்றை எதிர்பார்க்க முடியாது என கூறி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com