

வாஷிங்டன்
நாங்கள் அதன் மீது போர் தொடுத்ததாக கூறவில்லை என்றார் வெள்ளை மாளிகை செய்தித்துறை செயலர் சாரா சாண்டர்ஸ்.
வட கொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் நேற்று அமெரிக்கா தங்கள் நாட்டின் மீது போர் தொடுத்துள்ளதாகவும், இதை தங்கள் நாடு எதிர்கொள்ளும் என்றும் தெரிவித்திருந்தார்.
சென்ற வாரம் ஐநா சபையில் அமெரிக்க அதிபர் வட கொரியா தாக்குதலில் ஈடுபட்டால் அதை முற்றிலும் அழித்துவிடுவதாக எச்சரித்திருந்தார். அதிலிருந்து இரு நாட்டுத் தலைவர்களுக்கிடையில் வார்த்தைப் போர் வெடித்துள்ளது.