ரஷிய எரிவாயு மீதான விலை உச்சவரம்பை அமல்படுத்துவது குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை - வெள்ளை மாளிகை தகவல்

ஜி-7 நாடுகளின் தலைவர்கள், ரஷிய எரிவாயு மீதான விலை வரம்பை அமல்படுத்துவது குறித்து ஆராய பிற நாடுகளுக்கும் அறிவுறுத்த உள்ளது.
ரஷிய எரிவாயு மீதான விலை உச்சவரம்பை அமல்படுத்துவது குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை - வெள்ளை மாளிகை தகவல்
Published on

பெர்லின்,

ஜி-7 நாடுகளின் தலைவர்கள், ரஷிய எரிவாயு மீதான விலை வரம்பை அமல்படுத்துவது குறித்து ஆராய பிற நாடுகளுக்கும் அறிவுறுத்த உள்ளது. நேற்று நடந்த ஜி-7 மாநாட்டில் இது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஜி-7 நாடுகள் ரஷிய எண்ணெய் விலை வரம்பை ஆராய ஒப்புக்கொள்கிறது. அதேபோல, ரஷியாவின் எண்ணெய் மீதான விலை வரம்பை அமல்படுத்துவது குறித்து ஆராய மற்ற நாடுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளன.

குறிப்பிட்ட விலைக்கு மேல் விற்கப்பட்ட ரஷிய எண்ணெயை கொண்டு செல்வதற்கு தடை விதிப்பது குறித்து ஆராய்வதற்கு ஜி-7 நாடுகளின் தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். எண்ணெய் விலை உச்சவரம்பு ரஷியா மீது இருக்கும் மேற்கத்திய அழுத்தத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து, வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறியதாவது, ரஷியா எரிவாயு மீதான விலை வரம்பை அமல்படுத்துவது குறித்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் விவாதங்கள் தொடங்கியுள்ளன. விலை வரம்பு எவ்வாறு செயல்படும் மற்றும் அதன் தாக்கங்கள் என்ன என்பது பற்றி இந்தியாவுடன் பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம் என்றார்.

முன்னதாக ஏப்ரலில், அதிபர் ஜோ பைடன் பிரதமர் நரேந்திர மோடியிடம் கூறுகையில், "ரஷியாவில் இருந்து எரிசக்தி இறக்குமதியை அதிகரிப்பதில் இந்தியாவுக்கு விருப்பமில்லை" என்று கூறியிருந்தார். இந்த நிலையில், இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் விவாதங்கள் தொடங்கியுள்ளன என்று வெள்ளை மாளிகை தரப்பு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com