ஜோ பைடன் அமைச்சரவையில் இடம் பெறும் மந்திரிகள் யார் யார்?

ஜோ பைடன் அமைச்சரவையில் யாரெல்லாம் இடம்பெற வாய்ப்புள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஜோ பைடன் அமைச்சரவையில் இடம் பெறும் மந்திரிகள் யார் யார்?
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3 ந்தேதி நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். வருகிற 20ந்தேதி அவரது பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. அதில் முறைப்படி அமெரிக்காவின் 46வது அதிபராக பைடன் பொறுப்பேற்க உள்ளார்.

இதனிடையே எங்கள் அமைச்சரவையில் பெயர்களை அறிவித்து விட்டதில் பெருமிதம் கொள்கிறேன். ஆண்களைப் போலவே அதிகமான பெண்களைக் கொண்ட முதல் அமைச்சரவை இதுவாகும் என்றார்.

இந்நிலையில், அவரது அமைச்சரவையில் யாரெல்லாம் இடம்பெற வாய்ப்புள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த துறை வெளியுறவு துறை. முன்னாள் இணை தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஆண்டனி பிளிங்கெனுக்கு வெளியுறவு துறை மந்திரி பொறுப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

பாதுகாப்பு துறை மந்திரியாக லாய்டு ஆஸ்டின் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் இப்பதவியை அலங்கரிக்கும் முதல் ஆப்ரிக்க அமெரிக்கராக இவர் இருப்பார். நிதித்துறை பொறுப்பு ஜேனட் யெல்லன் என்பவருக்கு கிடைக்கும் எனத் தெரிகிறது.

உள்நாட்டு பாதுகாப்பு துறை அலேஜாண்ட்ரோ மேயர்கஸுக்கும், உள்துறை மந்திரி பொறுப்பு டெப் ஹாலாண்டுக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது. அட்டார்னி ஜெனரலாக மெர்ரிக் கார்லேண்டை ஏற்கனவே ஜோ பைடன் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com