சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை: உலக சுகாதார அமைப்பு

கொரோனா தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் தடுப்பூசி பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன. இதில் சுகாதார பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு சர்வதேச நாடுகளை உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டு உள்ளது.
சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை: உலக சுகாதார அமைப்பு
Published on

ஏனெனில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் கடந்த மே மாதம் வரை உலகம் முழுவதும் 1.15 லட்சம் சுகாதார பணியாளர்கள் கொரோனாவால் உயிரிழந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டாக்டர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ஒவ்வொரு சுகாதார அமைப்பின் முதுகெலும்பும், அவற்றின் பணியாளர்கள் ஆவர். நம் வாழ்வின் ஒரு கட்டத்தில் நாம் அனைவரும் சார்ந்திருக்கும் சேவைகளை இவர்களே வழங்குகிறார்கள். நம் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் மக்கள் தங்களை பாதுகாப்பற்றவர்களாக உணரும்போது நாம் அனைவரும் அவ்வளவு பாதிக்கப்படுகிறோம் என்று தெரிவித்தார்.

உலக அளவில் சராசரியாக ஐந்து சுகாதாரப் பணியாளர்களில் இருவர் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாக 119 நாடுகளின் தரவுகள் தெரிவிப்பதாக கூறிய டெட்ரோஸ், ஆனால் பிராந்தியங்கள் மற்றும் பொருளாதார குழுக்களிடையே பெரிய வேறுபாடுகள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே கொரோனா தடுப்பூசி பணிகளில் சுகாதார பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com