ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவர்...! உலவும் செய்தியால் கோபத்தில் பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவி ...!

தற்போது பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் மனைவி பிரிஜிட் மேக்ரானும் (68) சமூக வலைதளத்தால் பாதிக்கபட்ட்வர்களில் ஒருவராகி உள்ளார்.
ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவர்...! உலவும் செய்தியால் கோபத்தில் பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவி ...!
Published on

பாரீஸ்

பைட்ஸ் எட் டாக்குமெண்ட்ஸ் என்ற பத்திரிகை ஒன்றில் கடந்த செப்டம்பர் மாதம் ஒரு செய்தி வெளியானது. அதில், பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானின் மனைவியும், பிரான்சின் முதல் பெண்மணியுமான பிரிஜிட் மேக்ரான் ஒரு ஆணாகப் பிறந்தவர் என்றும், அவரது உண்மையான பெயர் ஜீன் மைக்கேல் டிரோக்னியூக்ஸ் (Jean-Michel Trogneux) என்றும் கூறப்பட்டிருந்தது.

அந்த பத்திரிகையின் பத்திரிகையாளரான நடஷா ரே என்பவர், தான் இந்த விவகாரம் குறித்து மூன்று ஆண்டுகள் விசாரித்து, பல நிபுணர்களின் கருத்துக்களையும் கேட்டு இந்த தகவலை வெளியிட்டதாக கூறி இருந்தார். கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி யூ-டியூபில் வெளியான அந்த வீடியோ நான்கே மணி நேரத்திற்குப் பின் நீக்கப்பட்டது. ஆனால், அதற்குள் அந்த வீடியோவை 4,70,000 பேர் பார்வையிட்டுள்ளார்கள்.

அந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து, டுவிட்டரில் அந்த செய்தி பகிரப்பட்டு, பிரான்சில் கடந்த வாரம் #JeanMichelTrogneux என்ற ஹேஷ்டேகின் கீழ் பரவலாக உலாவந்துள்ளது, ரீடுவீட் செய்யப்பட்டும் உள்ளது. சுமார் 66 ஆயிரம் முறை இந்த ஹேஷ்டேக் டுவிட்டரில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பாக பிரிஜிட் மேக்ரான் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளதாக லீ பிகரோ (Le Figaro) என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பிரிஜிட் மேக்ரான், இப்படிப்பட்ட சமூக ஊடக வதந்திகளில் சிக்கிய முதல் பிரபலம் அல்ல. ஏற்கனவே 2017ஆம் ஆண்டு, முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவியான மிச்செல் ஒபாமாவைக் குறித்தும் இத்தகைய வதந்திகள் உலாவந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com