இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு

இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு
Published on

ஸ்டாக்ஹோம்

மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை புரிபவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

உலக அளவில் கவுரவமிக்க விருதாக இது கருதப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வே நாட்டில் அறிவிக்கப்படுகிறது. மற்ற விருதுகள், சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்படுகின்றன.

இந்த நோபல் பரிசு, தங்க பதக்கமும், ரூ.8 கோடி பரிசுப்பணமும் கொண்டது ஆகும்.

நோபல் பரிசு அறிவிக்கும் பணி நேற்று தொடங்கியது. முதல் விருதாக, மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. நோபல் பரிசு கமிட்டி தலைவர் தாமஸ் பெர்மன் இதை அறிவித்தார்.

அமெரிக்காவை சேர்ந்த டேவிட் ஜூலியஸ், ஆர்டெம் பட்டபவுசியன் ஆகிய விஞ்ஞானிகளுக்கு இப்பரிசு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அவர் அறிவித்தார்.

இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. சியுகுரோ மனாபே( அமெரிக்கா), கிளாஸ் ஹாசில்மேன் ( ஜெர்மனி) மற்றும் ஜார்ஜியோ பாரிசி (இத்தாலி) ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com