‘பெண் என்பதால் வாய்ப்பு மறுப்பதா?’ - 550 ஆண்டு பழமையான இசைக்குழு மீது சிறுமி வழக்கு

பெண் என்பதால் வாய்ப்பு மறுக்கப்படுவதாக, 550 ஆண்டு பழமையான இசைக்குழு மீது சிறுமி ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
‘பெண் என்பதால் வாய்ப்பு மறுப்பதா?’ - 550 ஆண்டு பழமையான இசைக்குழு மீது சிறுமி வழக்கு
Published on

பெர்லின்,

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் புகழ்பெற்ற கதீட்ரல் இசைக்குழு இயங்கி வருகிறது. தேவாலயத்தில் பாடும் இந்த இசைக்குழு 554 ஆண்டுகள் பழமையானது. 1465-ம் ஆண்டு இரண்டாம் பிரடெரிக் என்ற ரோமன் மன்னரால் இந்த இசைக்குழு தொடங்கப்பட்டது. அப்போதிருந்து இப்போது வரை, இந்த இசைக்குழுவில் சிறுமிகள் இடம்பெற்றதில்லை. சிறுவர்கள் மட்டுமே இந்த இசைக்குழுவில் பாடி வருகிறார்கள்.

இந்நிலையில் பெர்லினை சேர்ந்த 9 வயது சிறுமி, இந்த இசைக்குழுவில் சேருவதற்காக விண்ணப்பித்திருந்தாள். இதற்காக கடந்த மார்ச் மாதம் அவளுக்கு குரல் சோதனை நடந்தது. அதில் சிறுமி சிறப்பாக செயல்பட்டபோதும் இசைக்குழுவில் சேர அவளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதற்கான காரணம் கேட்டபோது, பெண் என்பதால் சேர்க்கவில்லை என்று இசைக்குழு நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து, ஆண்-பெண் சம உரிமை பேசும் இந்த காலத்தில் பாலின வேறுபாட்டை காரணம் காட்டி வாய்ப்பு மறுக்கப்பட்டதை எதிர்த்து கதீட்ரல் இசைக்குழு மீது அந்த சிறுமி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com