லெனின் நினைவுச்சின்னம், உலக பாரம்பரிய சின்னமாகுமா? யுனெஸ்கோவுக்கு ரஷிய கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை

சோவியத் ரஷியாவை நிறுவியவர் லெனின். அவரது நினைவுச்சின்னங்களை உலக பாரம்பரிய சின்னங்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை இப்போது எழுந்துள்ளது.
லெனின் நினைவுச்சின்னம், உலக பாரம்பரிய சின்னமாகுமா? யுனெஸ்கோவுக்கு ரஷிய கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை
Published on

இது தொடர்பாக யுனெஸ்கோவிடம் ரஷிய கம்யூனிஸ்டு கட்சி வேண்டுகோள் வைத்துள்ளது.

இது பற்றி ரஷிய கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக்குழு தலைவர் மேக்சிம் சுரைக்கின் கூறுகையில், லெனினின் அனைத்து நினைவுச்சின்னங்களையும் உலக பாரம்பரிய சின்னங்களாக அறிவிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை ஐ.நா. சபையிடமும், யுனெஸ்கோவிடமும் வைத்து இருக்கிறோம். லெனின் உலக சமூக மாற்றங்களின் அடையாளம் ஆவார். உலகளவில் லெனினுக்கு 14 ஆயிரம் நினைவுச்சின்னங்கள் அமைந்திருந்தன. தற்போது இந்த எண்ணிக்கை 8 ஆயிரமாக குறைந்து விட்டது என கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, லெனினின் அனைத்து நினைவுச்சின்னங்களும் உலக பாரம்பரிய சின்னங்களாக அறிவிக்கப்பட்டால், அவை அமைந்துள்ள நாடுகள் அந்த நினைவுச்சின்னங்களை கவனித்து அவற்றைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும். ரஷியாவிலும், அனைத்து நினைவுச்சின்னங்களின் பட்டியல்களையும் வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்என குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com