

உலகின் முதல் டிரில்லியனரான எலான் மஸ்க்கிற்கு அடுத்ததாக 2வது டிரில்லியனராக உருவாகும் வாய்ப்பு மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் சூக்கர்பெர்க்குக்கு அதிகம் இருப்பதாக கணிக்கப்படுள்ளது. தற்போது அவரது சொத்து மதிப்பு அந்த இலக்கை விட மிகவும் குறைவாக இருந்தாலும், மெட்டாவின் ஏஐ வளர்ச்சியை முதலீட்டாளர்கள் அதிகம் நம்புவதால், மார்க்கின் செல்வம் மிக வேகமாக உயரக்கூடும் என சந்தையில் கணிக்கப்படுகிறது. இதனால் விரைவில் உலகின் இரண்டாது டிரில்லினர் என்ற அந்தஸ்தை மெட்டா நிறுவனர் பெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், உலகின் முதல் டிரில்லியனர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, எக்ஸ் சமூக வலைதளம் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்கின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. அந்த நிறுவனம் 7,500 கோடி டாலர் மதிப்பிலான பொதுப் பங்கு வெளியீட்டை அறிவித்தது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கின் ஆரம்ப விலை 135 அமெரிக்க டாலராக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.வர்த்தகத் தொடக்கத்திலேயே இப்பங்கின் மதிப்பு 21 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்தது.
இதைத் தொடர்ந்து, நிறுவனத்தின் சந்தை மூலதனம் 2.15 டிரில்லியன் டாலராக உயர்ந்தது. ஸ்பேஸ் எக்ஸ் பங்கு விலை அதிகரிப்பால் எலான் மஸ்கின் சொத்து மதிப்பும் வேகமாக உயர்ந்தது. அந்த நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளைக் கொண்டுள்ள எலான் மஸ்க், உலக வரலாற்றிலேயே 1 டிரில்லியன் டாலர் ( கிட்டதட்ட ரூ.100 லட்சம் கோடி) சொத்து மதிப்பை எட்டிய முதல் டிரில்லியனர் என்ற சாதனையை படைத்தார். இந்த பட்டியலிடலின் மூலம், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அமெரிக்காவின் பொதுப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களிலேயே 6-வது மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது.