வடகொரியாவுடன் ஆயுதப் போர் மட்டுமே தீர்வை தராது -அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

ஆயுதப் போர் மட்டுமே தீர்வை தராது என வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹிச்ஆர் மெக்மாஸ்டர் கூறியுள்ளார்.
வடகொரியாவுடன் ஆயுதப் போர் மட்டுமே தீர்வை தராது -அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
Published on

உலக நாடுகளின் கண்டத்திற்கு மத்தியிலும், வட கொரியா தொடர்ந்து தனது ஏவுகணை மற்றும் அணு ஆயுத திட்டத்தை அபிவிருத்தி செய்து வருவதால் பதற்றங்கள் அதிகரித்துள்ளன. தனது ஹவாசாங்-15 என்ற சமீபத்திய ஏவுகணை 4,475 கிலோ மீட்டர் உயரத்தில், 960 கிலோ மீட்டாருக்கு 53 நிமிடங்கள் பறந்ததாகவும், முழு அமெரிக்கா கண்டத்தையும் தாக்கும் வல்லமை இதற்கு இருப்பதாவும் வட கொரியா கூறியிருந்தது. இதனால், அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் கூடுதல் பாதுகாப்பை நிலைநிறுத்தப் பாதுகாப்புத்துறைக்கு கூறப்பட்டுள்ளது.

வட கொரியா முன்பு சோதித்த ஏவுகணைகளை விட சமீபத்திய ஏவுகணை அதிக உயரம் பறந்தது.

இந்நிலையில் , கலிபோர்னியாவில் நடந்த ஒரு கூட்டத்தில் ஹிச்ஆர் மெக்மாஸ்டர் கூறியதாவது:-

வடகொரியா நம்மை நெருங்கிகொண்டிருக்கிறது. போருக்கான சாத்தியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது, ஆனால், ஆயுதப்போரை தவிர்த்து இப்பிரச்சினையை தீர்க்க பல வழிகள் உள்ளன. சீனாவின் நலனைக் கருத்தில் கொண்டு இப்பிரச்சனையைத் தீர்க்க சீனாவிடம் கேட்டுள்ளோம். எரிபொருள் இல்லாமல் ஏவுகணை ஏவ முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com